நான் ராசியில்லாதவள்… அந்த படம் மட்டும் ஹிட் ஆகலன்னா அடையாளம் இல்லாமல் போயிருப்பேன் – கீர்த்தி சுரேஷ்!

Author: Shree
6 August 2023, 4:33 pm

கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழியில் முன்னணி நடிகையாக தற்போது கீர்த்தி சுரேஷ் ஜொலித்து வருகிறார். இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறார். அடுத்தடுத்து கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. மாமன்னன் படத்தை தொடர்ந்து கண்ணிவெடி என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அந்த படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் இந்தியில் ரீமேக் செய்யவுள்ள தெறி படத்தில் கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியுள்ளாராம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் ஆரம்ப காலத்தில் சில தோல்வி படங்களில் நடித்து தயரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்ததால் ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டுவிட்டாராம். அந்த நேரத்தில் கீர்த்தி சுரேஷ் நம்மளோட சினிமா வாழ்க்கை அவ்வளவு தான் என நினைத்து துவண்டுபோய்விட்டாராம். பின்னர் சிவகார்த்திகேயனுடன் 2015ம் ஆண்டு வெளியான ரஜினி முருகன் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று மார்க்கெட் பிடித்தாராம். இல்லையென்றால் இந்நேரம் அடையாளம் தெரியாமல் போயிருப்பேன் என கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 662

    10

    0