கார்… பங்களா… கோடியில் வருமானம் – அடேங்கப்பா!!! கீர்த்தி சுரேஷின் சொத்து இத்தனை கோடியா?

Author: Shree
17 October 2023, 11:38 am

கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இதனிடையே தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மிட் தோற்றத்திற்கு மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, தமிழ் என படு பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷின் சொத்து விவரம் குறித்த தகவல் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினான கீர்த்தி சுரேஷ் மொத சொத்து மதிப்பு ரூ. ரூ.60 கோடியில் இருந்து ரூ.70 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இவர் ஒரு படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்குகிறார். இது தவிர ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ், உஷா இன்டர்நேஷனல், ஜோஸ் ஆலுக்காஸ், உஷா இன்டர்நேஷனல் லிமிடெட் போன்ற பிரபல பிராண்ட் தூதராக உள்ளார். இதன் மூலம் ஆண்டுக்கு கணிசமான வருமானம் வருகிறதாம்.

இது தவிர இன்ஸ்டாகிராமில் 16 மில்லியன் பாலோவர்களை வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு இதன் மூலம் ரூ.25 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறதாம். இத்துடன் சென்னையில் ஒரு பிரம்மாண்டமான வீடும், ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ்-ல் ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பும் உள்ளது. கார்கள் என்று எடுத்துக்கொண்டால் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள Volvo S90, ரூ1.38 கோடி மதிப்புள்ள BMW 7 Series 730Ld, ரூ.81 லட்சம் விலையில் Mercedes Benz AMG GLC43, டொயோட்டா இன்னோவா என பல சொகுசு கார்களை வைத்து இருக்கிறார். பக்கத்துக்கு வீட்டு பொண்ணு போன்று நடித்து நம்ம பார்த்து வளர்ந்த கீர்த்தி சுரேஷ் இவ்வளவு கோடிகள் சம்பாதித்து வைத்திருப்பதை பார்த்தால் வியப்பாகவும் லைட்டா பொறுமையாகவும் இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 422

    0

    0