தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு,ஹிந்தி, மலையாளம்என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களைப் பெற்றிருப்பவர்.
தற்போது, தெறி ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்
தமிழில் ரகு தாத்தா திரைப்படத்தில் நடித்துள்ளார்.சமீபத்தில் நடந்த ரகு தாத்தா திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் பேசிய கீர்த்தி சுரேஷ், “ரகு தாத்தா படத்தின் கதையைக் கேட்டபோது எனக்கு சரியாக வருமா என யோசித்தேன். ஆனால், இயக்குநர் உறுதியாக இருந்தார்.நான் நடித்த ஹிந்திப் படமான பேபி ஜான் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் நேரத்தில், ஹிந்தி திணிப்புக்கு எதிரான ரகு தாத்தா படத்தில் நடித்திருப்பதைப் பற்றி பலரும் கேட்டனர். இந்த படம் ஹிந்தி எதிர்ப்பை சொல்லும் படம் அல்ல. ஹிந்தி திணிப்பு எதிர்ப்பை பேசுகிறது.அதுமட்டுமல்லாமல் இந்தப் படம் பெண்கள் மீதான திணிப்பை பேசுகிறது. அதில், இயக்குநர் ஹிந்தி திணிப்பை கையில் எடுத்து உடன் பெண்கள் மீதான அடக்குமுறை பற்றியும் சொல்லி இருக்கிறார். நகைச் சுவை கலந்த சமூகப் படமாக உருவாகியுள்ளது. அனைவருக்கும் இப்படம் பிடிக்கும்” எனக் கூறினார்.