அந்த ராத்திரியில் சமந்தா ஓடி வந்து… நட்பின் ஆழத்தை கூறி நெகிழ்ந்த கீர்த்தி சுரேஷ்!

Author:
4 September 2024, 10:47 am

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ரகு தாத்தா.

keerthy suresh

இதை திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. அடுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ஹிந்தியில் பேபி ஜான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் ஆக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் சமந்தாவின் கேரக்டரில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் சமந்தா குறித்தும் அவருடனான நட்பு குறித்தும் பேசிய விஷயம் டிரெண்ட் ஆகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது, எனக்கும் சமந்தாவுக்கும் ஒரே நபர் தான் மேனேஜராக இருக்கிறார். அவர் மூலமாக தான் நாங்கள் நண்பர்களாக பழகினோம்.

ஒருமுறை நான் எனது பிரண்ட்ஸோட துபாய்க்கு சென்று இருந்தேன். அப்போ சமந்தாவும் அங்கிருந்தார். அது எனக்கு தெரிய வந்தவுடன் அவருக்கு போன் செய்து நான் எனது பிரண்ட்ஸோட வந்திருக்கிறேன். ஃப்ரீயா இருந்தா வாங்க மீட் பண்ணலாம் என்று தான் சொன்னேன்.

samantha

உடனடியாக அவர் எதைப் பற்றியும் யோசிக்காமல் அன்றைக்கே அவராகவே கிளம்பி வந்து என்னை பார்த்தார். மேலும், எனது பிரண்ட்ஸோடு ஜாலியா பேசிவிட்டு அவங்களோட போட்டோ எடுத்துக்கிட்டு சென்றார்.

அந்த அளவுக்கு சமந்தா மிகவும் சாதாரணமாக எளிமையாக எல்லோருடனும் பழகக் கூடியவர். ஆண்டிலிருந்து நாங்கள் நல்ல தோழிகளாக மாறி விட்டோம் அவரது படங்கள் எப்ப வந்தாலும் நான் அவரை தொடர்பு கொண்டு பேசுவேன். மேலும், அடிக்கடி நாங்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணி பேசிக் கொண்டோம் என்று

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 341

    0

    0