கணவர் விஷயத்தில் கூட விஜய்யை விடாத கீர்த்தி சுரேஷ் : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2023, 4:32 pm

விஜய்க்கும் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் இடையே தவறான உறவு இருப்பது போல் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவருகின்றன. இதனால் தான் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய்யை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் தன்னுடைய 13 வருட பள்ளி பருவ காதலரை தான் திருமணம் செய்துகொள்ள போகிறார் என செய்தி வெளிவந்தது. ஆனால், அந்த செய்தியை ஓவர்டேக் செய்யும் விதமாக கீர்த்தி சுரேஷ் விஜய்யின் நண்பர் சஞ்சீவின் வீட்டின் மேலே வசித்து வருகிறார் என்றும், விஜய்யின் வீட்டிற்கு அருகே தான் சஞ்சீவ் வீடு இருக்கிறது என்றும் கூறப்பட்டது.

இதனால் மீண்டும் விஜய்க்கும், நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் இடையே காதல் உறவு இருக்கிறது என்றும், விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்றும் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இவை யாவும் எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் தனக்கு வருங்கால கணவர் விஜய் போல் இருக்க வேண்டும் என்று கீர்த்தி கூறும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கீர்த்தி தனக்கு விஜய் போல் வருங்கால கணவர் வேண்டும் என்று கூறி வீடியோவை தற்போது இந்த சர்ச்சையுடன் இணைத்து வைரலாக்கி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் இந்த சர்ச்சை எங்கு போய் முடிகிறது என்று.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!