யாரு கூட வேணுமானாலும் நடிப்பேன்.. ஆனா இவரு கூட நடிக்க மாட்டேன் : பிரபல நடிகருடன் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷ்!!
Author: Udayachandran RadhaKrishnan11 March 2022, 11:51 am
சினிமாவில் குறுகிய காலத்தில் வளர்ச்சி கிடைப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல. அப்படி கிடைத்தால் அந்த நடிகர், நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் குறுகிய காலத்தில் உச்சத்துக்கு சென்ற நடிகைகள் சில நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என கட்டுப்பாடுகளை விதிப்பது இயக்குநர்கள், பட தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை தரும் விஷயம் என்றே கூறலாம்.
அப்படித்தான் முதல் படமே ஊத்திக்கிட்டாலும், வாரிசு நடிகை என்ற பெயர் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறிப்பாக இவரது அழகும், வசீகரமும் தான் இவர் முன்னேற்றத்திற்கு காரணம்.
ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன், விக்ரம்பிரபு என இளம் நாயகர்கள் உடன் நடித்தாலும், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலங்கு என அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடன் குறுகிய காலத்தில் நடித்து பிரபலமானார்.
மேலும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து தேசிய விருது தட்டிச்சென்றது மற்ற நடிகைகளிடம் சற்று பீதியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது ஒரு சில படங்களில் மட்டும் கமிட் ஆகியுள்ள நிலையில், தமிழில் முன்னணி நடிகரான ஜெயம் ரவியுடன் அடுத்த படத்தில் நடிக்க கேட்டுள்ளனர்.
உடனே கீர்த்தி சுரேஷ் நோ சொல்லியுள்ளார். யாருடன் வேண்டுமானாலும் நடிப்பேன் ஆனால் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என கூறியுள்ளது கோலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது-.
ஜெயம் ரவியுடன் ஜோடி சேர எத்தனையோ நடிகர்கள் கால் கடுக்க காத்துள்ளனர். ஆனால் இவர் ஏன் இப்படி சொல்கிறார் என தெரியவில்லை என பட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் குழம்பியுள்ளனர்.
ஜெயம் ரவியுடன் ஜோடி போட்டால் அந்த நடிகை சினிமாவில் வளர்ச்சியடைவார் என ஆரம்ப காவலத்தில் பேசப்பட்டதும் உண்டு, அதற்கேற்றார் போல் நடந்ததும் உண்டு.. குறிப்பாக சதா, அசின், ஸ்ரேயா போன்ற நடிகைகளை உதாரணமாக சொல்லலாம்.
ஆனால் குறுகிய காலத்தில் உச்சத்திற்கே சென்ற கீர்த்தி சுரேஷ், ஜெயம் ரவியுடன் நடிக்க மறுத்துள்ளது சினிமா வட்டாரங்களை எரிச்சலடைய வைத்துள்ளது.