Badass’மா லியோ Das’மா… ட்ரைலர் பார்த்து மெர்சலான கீர்த்தி சுரேஷ் -வைரலாகும் பதிவு!
Author: Shree6 October 2023, 9:45 am
தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது. மேலும், லியோ படத்திற்கு சென்சார் யூ/ ஏ சான்றுகள் வழங்கி உள்ளது.
இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், நேற்று 6:30மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். அதன்படி இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த டிரைலரில் “‘எவனோ ஒரு தே**யா பையன் என்னை மாதிரி’ இருக்கான்னு ஆளாளுக்கு என்ன போட்டு உயிரை எடுத்தா நான் என்னடி பண்ணுவேன்? என விஜய் ஆக்ரோஷமாக பேசுகிறார். இதில் விஜய் டபுள் ஆக்ஷனில் நடித்துள்ளார். ஒரு விஜய் சீரியல் கில்லராகவும் இன்னொரு விஜய் ஜாக்லெட் பேக்ட்ரி நடத்துபவராகவும் ட்ரைலரில் காட்டப்பட்டுள்ளது. ட்ரைலர்பார்த்து விஜய் ரசிகர்கள் செம ஹேப்பி ஆகிவிட்டனர்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் லியோ ட்ரைலர் பார்த்து மெர்சலாகி X பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் “Badass’மா லியோ Das’மா நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் – திரிஷாவின் இந்த காம்போவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். லோகேஷ் கனகராஜின் இந்த இரத்தக்களரி ஸ்வீட் சர்ப்ரைஸ் பார்க்க காத்திருக்க முடியவில்லை. மற்றும் அனிருத் நீ நெருப்பில் இருக்கிறாய் நண்பா! உங்களுக்கு மகிழ்ச்சி லலித் சார் மற்றும் ஜெகதீஷ் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Badass ma! Leo Das ma!🔥 @actorvijay Sir, @trishtrashers looking forward for this combo after a long time 🥰
— Keerthy Suresh (@KeerthyOfficial) October 5, 2023
Can’t wait to watch this bloody sweet surprise by @Dir_Lokesh. @anirudhofficial you are on fire buddy!
Happy for you Lalit Sir and @Jagadishbliss 🤗❤️…