பொம்பளைங்கனா இளக்காரமா போச்சா? என் புருஷனை பார்த்து இப்படி கேட்பீங்களா? கீர்த்தி பாண்டியன் காட்டம்!
Author: Rajesh22 December 2023, 4:31 pm
நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.
இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டார். கீர்த்தி பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் இயற்கை சார்ந்த முறையில் நடைபெற்ற இத்திருமணம் பலரது கவனத்தை ஈர்த்தது.
திருமணத்திற்கு பின்னர் இருவரும் பிசியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். சபநாயகன் என்ற படத்தில் அசோக் செல்வனும் கண்ணகி என்ற படத்தில் கீர்த்தி பாண்டியனும் நடித்திருந்தனர். இது குறித்து கீர்த்தி பாண்டியன் கலந்துக்கொண்ட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ” நீங்கள் திருமணத்திற்கு பின்னரும் நடிக்கிறீர்களே? இது குறித்து உங்கள் கணவர் ஒன்றும் சொல்லவில்லையா? என கேட்டதற்கு….
ஏன் கல்யாணம் ஆகிட்டா நடிக்க கூடாதா? திருமணம் ஆன பின்னரும் தொடர்ந்து நடித்தால் என்ன பிரச்சினை? இதே கேள்வியை உங்களால் அசோக் செல்வனிடம் கேட்க முடியுமா? ஆண்கள் திருமணம் செய்துவிட்டு நடிக்கலாம், ஆனால், நடிகைகளுக்கு மட்டும் விதிவிலக்கா? என காட்டமாக பதிலளித்திருந்தார்.
கீர்த்தி பாண்டியனின் இந்த பதில் குறித்து அசோக் செல்வனிடம் கேட்டதற்கு, ஆமா… சரி தானே! நான் ஒன்றும் கீர்த்தி பாண்டியனுக்கு ஓனர் கிடையாது, அவருக்கு பார்ட்னர் அவ்ளோவ் தான். அவர் நடிக்கக் கூடாது என ஆர்டர் போட எனக்கு உரிமை இல்லை. இத்தனை வருடமாக நடித்துக்கொண்டிருக்கும் என்னை திடீரென நடிப்பை நிறுத்துங்கள் என சொன்னால் எனக்கு எவ்வளவு வலிக்குமோ அதே வலி தான் அவருக்கும் இருக்கும் என நியாமான பதிலை கூறி விமர்சனவாசிகளின் வாயை அடைத்தார் அசோக் செல்வன்.