அட ஆமா ..!கார்த்தியின் படத்தில் அப்போ குழந்தை…இப்போ அவருக்கே ஜோடி.!
Author: Selvan17 February 2025, 9:05 pm
10 வருடங்களுக்கு பிறகு கார்த்தியுடன் ஜோடி
நடிகர் கார்த்தி எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார்.இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த மெய்யழகன் திரைப்படம்,இவருக்கு நல்லா வரவேற்பை கொடுத்தது.
இதையும் படியுங்க: பாலு மகேந்திரா படம்னாலே தனி ஸ்பெஷல் தான்..மீண்டும் சர்ச்சை பேச்சில் சிக்கிய இளையராஜா.!
காதல்,ஆக்ஷன்,கமர்சியல் என அனைத்து விதமான கதைகளையும் தேர்ந்தெடுத்து தனக்கென்று உரிய ஸ்டைலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வா வாத்தியார்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்,சமீபத்தில் படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்,இவர் ஏற்கனவே இயக்குனர் சுசிந்தீரன்,2010ஆம் ஆண்டு கார்த்தி வைத்து எடுத்துள்ள ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.
தற்போது கீர்த்தி ஷெட்டி கார்த்திக்கு ஜோடியாக ‘வா வாத்தியார்’ படத்தில் நடிக்கிறார்,இதனால் ரசிகர்கள் இந்த தகவலை இணையத்தில் பரப்பி,கீர்த்தி ஷெட்டி தானா என விவாதித்து வருகின்றனர்.இந்த தகவல் குறித்து கீர்த்தி ஷெட்டி எந்த ஒரு பதிலும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..