அட இங்கேயும் விஜய்யா?.. தவறாக பரவும் வந்ததிகள் குறித்து பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ்..!
Author: Vignesh25 July 2024, 2:01 pm
வாரிசு நடிகை என்ற பெயர் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறிப்பாக இவரது அழகும், வசீகரமும் தான் இவர் முன்னேற்றத்திற்கு காரணம். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன், விக்ரம்பிரபு என இளம் நாயகர்கள் உடன் நடித்தாலும், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார்.

மேலும் படிக்க: அந்த பிரச்சனை.. விக்ரம் படத்துல நடிச்சி 5 டாக்டர்கிட்ட போனேன் பகீர் கிளப்பும் மாளவிகா மோகனன்..!
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கீர்த்தி சுரேஷிடம் வதந்திகள் குறித்து உங்களுடைய பார்வை என்ன அதை எப்படி எதிர்கொள்வீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ் விமர்சனம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், சில முறை நம்முடைய குடும்பத்தை பற்றி பேசும்பொழுது தேவையில்லாத சில விமர்சனங்களை கூறும் போது அதை நான் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுவேன். உண்மையில் விளக்கம் கொடுத்தால் தெளிவாகும் அதுவும் அந்த வதந்திக்கு விளக்கம் கொடுத்தால் அதுவே உண்மையாகிவிடும் என விஜய் சார் கூறி இருப்பார். அது மிகவும் உண்மை தேவையில்லாத விஷயங்களுக்கு நம்முடைய எனர்ஜியை செலவிட வேண்டாம் என கீர்த்தி சுரேஷ் அந்த பேட்டையில் பேசி இருந்தார்.