மனச கொள்ளையடிச்சிட்டீங்க… பிரபல பாடகரின் காதல் Proposal ஏற்றுக்கொண்ட கீர்த்தி சுரேஷ்!

Author:
27 August 2024, 1:20 pm

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு விக்ரம் பிரபு இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் இப்படி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் தற்போது ரகு தாத்தா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. பெண்களின் சுதந்திரம் பற்றிய கருத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்.

அதை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியான. தெறி படத்தின் இந்தி ரீமேக்காக எடுக்கப்பட்டிருக்கும் “பேபி ஜான்” திரைப்படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகை சமந்தா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை கீர்த்தி சுரேஷ் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 4 நிகழ்ச்சியில் “செலிப்ரேடிங் கேப்டன் விஜயகாந்த்” என சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் கீர்த்தி சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் கேரளாவை சேர்ந்த போட்டியாளர் ஒருவர் கீர்த்தி சுரேஷிடம் தனது காதலை மலையாளம் மொழியிலே ப்ரபோஸ் செய்துள்ளார். அவரின் வார்த்தைகளில் மெய்மறந்து போன கீர்த்தி சுரேஷ் இதற்கு நான் எப்படி நோ சொல்ல முடியும்? ஐ லவ் யூ என கூறி அவரது காதல் ப்ரபோசலை ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு அந்த நபர் நான் வேறொருவரிடம் சொல்ல நினைத்த ப்ரபோசலை கீர்த்தி சுரேஷிடம் சொல்லிவிட்டேன். இது செல்ல வேண்டியவருக்கு போய் சேர்ந்து விட்டிருக்கும் என கூற அந்த அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 219

    0

    0