ரசிகரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்… பின்னணி காரணம் இதுதான்!

Author: Rajesh
25 January 2024, 3:05 pm

அழகு நடிகையாக, ஹோம்லி பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் இது என்ன மாயம் திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியான நடித்து பிரபலமானார். தொடர்ந்து ரஜினி முருகன் , தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். மகாநடி படத்தின் இவரின் நடிப்பு எல்லோரையும் பிரம்மிக்க வைத்தது.அப்டத்திற்காக தேசிய விருது வாங்கி தென்னிந்திய சினிமாவிற்கே பெருமை சேர்த்தார்.

தொடர்ந்து சில தோல்விகளை சந்தித்த கீர்த்தி சுரேஷ் தெலுங்கிலும் பிளாப் திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் இழந்தார். இதனிடையே விஜய் , அனிருத், குடும்ப நண்பர் என அவ்வப்போது யாருடனாவது காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இதனிடையே பாலிவுட் வாய்ப்பிற்காக தனது உடல் எடையை குறைத்து படு ஒல்லியாகிவிட்டார். அந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷ் ரொம்பவே விமர்சிக்கப்பட்டார்.

keerthy suresh - updatenews360

ஆனாலும் அவர் அதை பெரிது படுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் ரசிகர் ஒருவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, கீர்த்தி சுரேஷின் தீவிர ரசிகர் ஒருவர் தொடர்ச்சியாக 233 நாட்கள்
ட்வீட் செய்து வந்துள்ளார்.

அவரது பதிவுக்கு கீர்த்தி சுரேஷ் ரிப்ளை செய்யும் வரை நான் தொடர்ந்து ட்வீட் செய்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தான் கீர்த்தி சுரேஷ் அவருக்கு பதில் அளித்துள்ளார். அதாவது இன்று உங்களின் 234வது ட்வீட் அது என்னுடைய பேன்சி நம்பர். தாமதமாக ரிப்ளை செய்ததற்கு மன்னிக்கவும். அதீத அன்புடன் கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டு உள்ளார். ரசிகரிடம் இவ்வளவு கனிவாக கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளதை பலர் பாராட்டி வருகிறார்கள்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!