கணவருடன் கவர்ச்சி குத்தாட்டம்… நைட் பார்ட்டியில் கீர்த்தி சுரேஷ்!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2025, 11:12 am

வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மேனகாவின் மகளாக மலையாள சினிமாவில் நுழைந்த கீர்த்தி சுரேஷ்க்கு தமிழ், தெலுங்கு மொழிப் படங்கள் வாய்ப்புகள் குவிந்தது.

தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த அவர், விஜய், ரஜினி, விக்ரம்,சூர்யா, தனுஷ் என முன்னணி நாயகர்களோடு ஜோடி போட்டார்.

சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த படங்கள் பயங்கர ஹிட். இந்த கெமிஸ்டரியை ரசிகர்கள் வரவேற்றனர். தொடர்ந்து தெலுங்கில் வெளியான மகாநதி ஹிட் அடித்தது மட்டுமல்லாமல் தேசிய விருது கீர்த்தி சுரேஷை தேடிச் சென்றது.

இதையடுத்து ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், திடீரென தனது திருமணத்தை அறிவித்தார். 15 வருடமாக காதலித்து வந்த நீண்ட நாள் நண்பரை மணம் முடித்தார்.

கையோடு பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த அவர், யாரும் எதிர்பார்க்கா வகையில் கவர்ச்சியை காட்டினார். கணவருடன் வெளியில் ஊர் சுற்றிய கீர்த்தி தொடர்ந்து கவர்ச்சியை தாராளம் காட்டி வருவது பேசு பொருளாகியுள்ளது.

இந்நிலையில் கணவர் ஆண்டனி தட்டிலுடன் இணைந்து தனது நண்பர்களுகுக்கு பார்ட்டி வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். கணவருடன் சேர்ந்து கத்தாட்டம் போட்ட அவரின் புகைப்படங்கள் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!