கன்னத்தில் ஓங்கி ஒரு அறை… காதுக்குள்ள ஒய்யுனு….. கீர்த்தி சுரேஷை தாக்கிய மர்ம நபர்..!

Author: Vignesh
8 February 2024, 5:26 pm

அழகு நடிகையாக, ஹோம்லி பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் இது என்ன மாயம் திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியான நடித்து பிரபலமானார். தொடர்ந்து ரஜினி முருகன் , தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். மகாநடி படத்தின் இவரின் நடிப்பு எல்லோரையும் பிரம்மிக்க வைத்தது.அப்டத்திற்காக தேசிய விருது வாங்கி தென்னிந்திய சினிமாவிற்கே பெருமை சேர்த்தார்.

keerthy suresh - updatenews360

தொடர்ந்து சில தோல்விகளை சந்தித்த கீர்த்தி சுரேஷ் தெலுங்கிலும் பிளாப் திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் இழந்தார். இதனிடையே விஜய் , அனிருத், குடும்ப நண்பர் என அவ்வப்போது யாருடனாவது காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இதனிடையே பாலிவுட் வாய்ப்பிற்காக தனது உடல் எடையை குறைத்து படு ஒல்லியாகிவிட்டார். அந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷ் ரொம்பவே விமர்சிக்கப்பட்டார். ஆனாலும் அவர் அதை பெரிது படுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

keerthy suresh - updatenews360

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு நாள் தானும் தனது தோழியும் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு பையன் நன்றாக குடித்துவிட்டு ஒருவர் குடிபோதையில் தன் மேல் வந்து விழுந்ததாகவும், அவனை தான் ஓங்கி ஒரு அறை அடித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டேன்.

keerthy suresh

சில நிமிடங்களுக்கு பின் திடீரென ஏதோ என் தலையில் வந்து அடித்தது போல் இருந்தது. காதுக்குள்ள ஒய்யுனு சத்தம் கேட்டது. நான் விபத்தில் சிக்கிக் கொண்டேன். இறந்துவிட்டேன் என்று எண்ணினேன் ஆனால், அப்படி நடக்கவில்லை. அந்தப் பையன் என் தலையில் அடித்து விட்டு வேகமாக ஓடினான். எனக்கு சில நிமிடங்கள் என்ன நடந்தது என்றே புரியவில்லை. அதன் பின் நானும் எனது தோழியும் அவனை துரத்தி பிடித்தும், பக்கத்தில் ஒரு போலீஸ் பூத் ஒன்று இருந்தது அங்கு நடந்ததை கூறி அவனை ஒப்படைத்தோம் என்று தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 274

    0

    0