ஒரு முறை கூட அந்த படங்களை பார்த்ததில்லை… பச்சையா பொய் சொல்லும் கீர்த்தி சுரேஷ்!
Author: Shree1 December 2023, 6:31 pm
கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.
அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.
இதனிடையே தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மிட் தோற்றத்திற்கு மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, தமிழ் என படு பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில் நான் நடித்த படங்களை ஒன்று கூட நான் பார்த்ததில்லை என கூறியிருக்கிறார். காரணம் அந்த படத்தை பார்த்தால் நான் என்னென்ன தவறுகள் செய்துள்ளேன்.
இதையெல்லாம் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்ற எண்ணம் வரும். அது அடுத்த ஒரு வாரத்திற்கு என்னை தூங்க விடாமல் செய்யும் அதனால் என்னுடைய படங்களை நான் பார்ப்பதில்லை என கூறியிருக்கிறார். இது சுத்த பொய்… ஒரு படம் கூடவா பார்த்திருக்க மாட்டாங்க என நெட்டிசன்ஸ் அவரை விமர்சித்துள்ளனர்.