அதுக்கு ஆப்ரேஷன் பண்ணீங்களான்னு கேட்குறாங்க – கீர்த்தி சுரேஷ் வேதனை!

Author: Rajesh
3 January 2024, 4:02 pm

அழகு நடிகையாக, ஹோம்லி பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் இது என்ன மாயம் திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியான நடித்து பிரபலமானார். தொடர்ந்து ரஜினி முருகன் , தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். மகாநடி படத்தின் இவரின் நடிப்பு எல்லோரையும் பிரம்மிக்க வைத்தது.அப்டத்திற்காக தேசிய விருது வாங்கி தென்னிந்திய சினிமாவிற்கே பெருமை சேர்த்தார்.

தொடர்ந்து சில தோல்விகளை சந்தித்த கீர்த்தி சுரேஷ் தெலுங்கிலும் பிளாப் திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் இழந்தார். இதனிடையே விஜய் , அனிருத், குடும்ப நண்பர் என அவ்வப்போது யாருடனாவது காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இதனிடையே பாலிவுட் வாய்ப்பிற்காக தனது உடல் எடையை குறைத்து படு ஒல்லியாகிவிட்டார். அந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷ் ரொம்பவே விமர்சிக்கப்பட்டார்.

keerthy suresh

அதுமட்டும் இன்றி உடல் எடையை குறைக்க ஆப்ரேஷன் செய்தீர்களா? என பலர் கிண்டலடித்ததை பேட்டி ஒன்றில் சுட்டிக்காட்டிய கீர்த்தி சுரேஷ் அது தனக்குமிகுந்த வேதனையை கொடுத்தது என கூறி வருத்தப்பட்டார். நான் ஆப்ரேஷன் எல்லாம் எதுவும் செய்துக்கொள்ளவில்லை. இயற்கையான முறையில் உணவில் சிறு மாற்றங்கள் செய்தேன்.. உடற்பயிற்சிகளை மேற்கொண்டேன். தினமும் யோகா , நடைப்பயிற்சி செய்தேன் அவ்வளவுதான் என்று கொஞ்சம் கோபத்துடன் தெளிவுபடுத்தினார்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!