குளிக்கும்போது அதை செய்தால் பெருசாகிடும்… கீர்த்தி சுரேஷின் நூதன நம்பிக்கை!

Author: Rajesh
31 January 2024, 3:16 pm

அழகு நடிகையாக, ஹோம்லி பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் இது என்ன மாயம் திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியான நடித்து பிரபலமானார். தொடர்ந்து ரஜினி முருகன் , தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். மகாநடி படத்தின் இவரின் நடிப்பு எல்லோரையும் பிரம்மிக்க வைத்தது.அப்டத்திற்காக தேசிய விருது வாங்கி தென்னிந்திய சினிமாவிற்கே பெருமை சேர்த்தார்.

தொடர்ந்து சில தோல்விகளை சந்தித்த கீர்த்தி சுரேஷ் தெலுங்கிலும் பிளாப் திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் இழந்தார். இதனிடையே விஜய் , அனிருத், குடும்ப நண்பர் என அவ்வப்போது யாருடனாவது காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இதனிடையே பாலிவுட் வாய்ப்பிற்காக தனது உடல் எடையை குறைத்து படு ஒல்லியாகிவிட்டார். அந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷ் ரொம்பவே விமர்சிக்கப்பட்டார்.

அதுமட்டும் இன்றி உடல் எடையை குறைக்க ஆப்ரேஷன் செய்தீர்களா? என பலர் கிண்டலடித்ததை பேட்டி ஒன்றில் சுட்டிக்காட்டிய கீர்த்தி சுரேஷ் அது தனக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது என கூறி வருத்தப்பட்டார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கீர்த்தி சுரேஷின் தயார், கீர்த்தி எப்போதும் பச்சை தண்ணியில் தான் குளிப்பாள்.

அது குளிர்காலமாக இருந்தாலும் சரி, மழைகாலமாக இருந்தாலும் சரி. காரணம், அவளுக்கு ஒரு நூதன நம்பிக்கை… அது என்னவென்றால் வெந்நரில் உடலின் தோல்கள் தளர்ச்சியாகிவிடும் சீக்கிரம் வயதான தோற்றம் வந்துவிடும் என கூறுவாள். ஒரு முறை கடுங்குளிரில் ஊட்டியில் படப்பிடிப்பின்போது அதிகாலை 4 மணிக்கு எழுந்து பச்சை தண்ணியில் தான் குளிப்பாள். அந்த அளவிற்கு நூதன நம்பிக்கைகொண்டிருக்கிறாள் என மேனகா சுரேஷ் கூறினார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!