என்ன கருமம்டா இது…? ஐஸ்க்ரீம் பஜ்ஜி பார்த்து ஷாக்கான கீர்த்தி சுரேஷ்!

Author:
21 August 2024, 8:45 pm

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு விக்ரம் பிரபு இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் இப்படி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் தற்போது ரகு தாத்தா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிவுள்ளது. பெண்களின் சுதந்திரம் பற்றிய கருத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்.

அதை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியான. தெறி படத்தின் இந்தி ரீமேக்காக எடுக்கப்பட்டிருக்கும் “பேபி ஜான்” திரைப்படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகை சமந்தா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார்.

keerthy suresh - updatenews360

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் வித்தியாசமாக உணவு சமைக்கிறேன் என கூறி பல இடங்களில். சகிக்க முடியாத காம்பினேஷன்களில் உணவுகளை சமைத்து அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்ட ட்ரெண்ட் செய்கிறார்கள். அந்த வகையில் தற்போது ஐஸ்கிரீமில் பஜ்ஜி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக அதை பார்த்து பேர் அதிர்ச்சி கொள்ளான கீர்த்தி சுரேஷ் Oh Noo!! என்று ரிப்ளை செய்துள்ளார். இந்த வீடியோ தற்ப்போது சமுகவலைத்தளங்கள் முழுக்க வைரலாகி வருகிறது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!