கீர்த்தி சுரேஷ் வீட்டில் இத்தனை பேர் நடிகர்களா? அப்போ கலைக்குடும்பம்னு சொல்லுங்க!

Author: Vignesh
21 February 2024, 5:04 pm

சினிமாவில் குறுகிய காலத்தில் வளர்ச்சி கிடைப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல. அப்படி கிடைத்தால் அந்த நடிகர், நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் குறுகிய காலத்தில் உச்சத்துக்கு சென்ற நடிகைகள் சில நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என கட்டுப்பாடுகளை விதிப்பது இயக்குநர்கள், பட தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை தரும் விஷயம் என்றே கூறலாம்.

keerthy suresh

அப்படித்தான் முதல் படமே ஊத்திக்கிட்டாலும், வாரிசு நடிகை என்ற பெயர் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறிப்பாக இவரது அழகும், வசீகரமும் தான் இவர் முன்னேற்றத்திற்கு காரணம்.

keerthy suresh

ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன், விக்ரம்பிரபு என இளம் நாயகர்கள் உடன் நடித்தாலும், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலங்கு என அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடன் குறுகிய காலத்தில் நடித்து பிரபலமானார்.

keerthy suresh

மேலும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து தேசிய விருது தட்டிச்சென்றது மற்ற நடிகைகளிடம் சற்று பீதியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது ஒரு சில படங்களில் மட்டும் கமிட் ஆகியுள்ள நிலையில், தமிழில் முன்னணி நடிகரான ஜெயம் ரவியுடன் இன்று கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள சைரன் திரைப்படம் வெளியாகியுள்ளது, நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

keerthy suresh

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் அப்பா தயாரிப்பாளர், அம்மா நடிகை இவரும் நடிகை என்பதை நாம் அறிவோம். தற்போது, கீர்த்தி சுரேஷ் பாட்டி நடித்த ஒரு படம் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரலாகி வருகிறது. அதாவது, கீர்த்தி சுரேஷின் பாட்டி கடைக்குட்டி சிங்கம் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இதனைப் பார்த்த ரசிகர்கள் அப்ப கீர்த்தி சுரேஷோட குடும்பம் கலை குடும்பம்னு சொல்லுங்க என்று கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.

keerthy suresh - updatenews360
  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!