பிரபல இசையமைப்பாளரின் காதல் வலை…சிக்கிய கீர்த்தி சுரேஷ்…விரைவில் திருமண அறிவிப்பு .!

Author: Selvan
17 November 2024, 4:13 pm

கீர்த்தி சுரேஷின் சினிமா பயணம்

தமிழ் திரையுலகில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.இவர் மலையாளத்தை பூர்விகமாக கொண்டாலும் தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்தன.

Keerthy Suresh Mahaanati film success and awards

சூர்யா, விஜய், ரஜினி,சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் சமீபத்திய நடிப்பில் வெளியான மகாநதி திரைப்படம் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது என சொல்லலாம்.பழம்பெரும் நடிகை சாவித்ரியின் கதையை வைத்து எழுதப்பட்ட இந்த படத்தில் நடிப்பில் அசத்தி இருப்பார்.இப்படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது.

இதையும் படியுங்க: காதை இனிமையாக்கும் ராஜாவின் குரல்… விடுதலை 2 படத்தின் பாடல் வெளியீடு…!

அனிருத் உடன் காதல்

கீர்த்தி சுரேஷ் குறித்த வதந்திகளும் அவ்வப்போது வெளியாகி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு, கீர்த்திக்கு தூரத்து உறவினர் ஒருவருடன் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது. அதன் பிறகு, ஒரு அரசியல் பிரபலத்தின் மகனுடன் திருமணம் என பேசப்பட்டது.

Keerthy Suresh marriage rumors with Anirudh

இந்த தகவல்களை அவரது தந்தை சுரேஷ் முற்றிலுமாக ஊடகத்தினரிடம் மறுத்தார். இப்போது, மீண்டும் அதே போன்ற ஒரு தகவல் பரவி வருகிறது.
32 வயதாகும் நடிகை கீர்த்தி சுரேஷும், இந்திய அளவில் வெற்றிகரமான இசையமைப்பாளராக விளங்கும் ராக் ஸ்டார் அனிருத்தும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவி வருகிறது. இவர்கள் இருவரும் ரெமோ, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் ஒன்றாக வேலை பார்த்து இருக்கின்றனர்.

அது மட்டுமன்றி இருவருக்கும் ஒரு நல்ல நட்பும் இருந்து வருகிறது.தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, கீர்த்திக்கும் அனிருத்திற்கும் வரும் டிசம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. திரைத்துறையில் பிசியாக வலம் வரும் அனிருத் பிரபல தாெழில் அதிபர் ஒருவரின் மகளை காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கீர்த்திக்கும் இவருக்கும் இடையே இருப்பது வெறும் நட்பாக கூட இருக்கலாம் என்ற தகவலும் சொல்லப்படுகிறது . அனிருத் ரஜினிகாந்தின் கூலி,அஜித்தின் விடாமுயற்சி விஜய்யின் தளபதி 69 உள்பட பல முக்கிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!