இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?.. பெரிய இடத்து பையனுடன் கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம்..!
Author: Vignesh23 April 2024, 3:56 pm
சினிமாவில் குறுகிய காலத்தில் வளர்ச்சி கிடைப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல. அப்படி கிடைத்தால் அந்த நடிகர், நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் குறுகிய காலத்தில் உச்சத்துக்கு சென்ற நடிகைகள் சில நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என கட்டுப்பாடுகளை விதிப்பது இயக்குநர்கள், பட தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை தரும் விஷயம் என்றே கூறலாம்.
மேலும் படிக்க: கிளாமர் லுக்கிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. அடேங்கப்பா பிழைக்க தெரிஞ்ச பொண்ணு..!
அப்படித்தான் முதல் படமே ஊத்திக்கிட்டாலும், வாரிசு நடிகை என்ற பெயர் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறிப்பாக இவரது அழகும், வசீகரமும் தான் இவர் முன்னேற்றத்திற்கு காரணம். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன், விக்ரம்பிரபு என இளம் நாயகர்கள் உடன் நடித்தாலும், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலங்கு என அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடன் குறுகிய காலத்தில் நடித்து பிரபலமானார்.
மேலும் படிக்க: அந்த விஷயத்தில் வீக்.. கல்யாணமே பண்ணி இருக்க மாட்டேன்.. சங்கீதா வாழ்க்கை இப்படி ஆகிருச்சே..!
மேலும் படிக்க: Vijay TV நீயா நானா பிரபலம் இரயில் மோதி பலி.. அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்..!
இந்த நிலையில், தெலுங்கு சினிமா சென்றதும் கீர்த்தி சுரேஷ் அங்கு தாறுமாறாக கிளாமர் காட்ட ஆரம்பித்துள்ளார். தமிழில் மட்டும் சிறப்பாக நடித்துவிட்டு அங்கு சென்றதும் கிளாமரை அள்ளி தெளித்து வந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இவர் மீது தமிழ் ரசிகர்கள் வெறுப்பைக்காட்ட துவங்கிவிட்டனர்.
மேலும் படிக்க: குடும்பத்தை விட்டு பிரிந்த விஜய்?.. திருமணத்திற்கு தனியா வந்த மனைவி சங்கீதா..!
இந்நிலையில், சமீப காலமாக கீர்த்தி சுரேஷிற்கு எப்போது திருமணம் யாருடன் திருமணம் என்று கேள்விகளும் வதந்திகளும் செய்திகளாக இணையதளத்தில் வெளியாகியது. அதாவது, கீர்த்தி சுரேஷ் -க்கு திருமணம் குறித்த பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வருகிறது. 13 வருடமாக கீர்த்தி சுரேஷ் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவர் அவருடைய நண்பர் என்றும், அவர்களுக்கு இடையே விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், கூறப்பட்டது.
மேலும் படிக்க: ஜாதி பார்த்து ஒதுக்கி வைக்கப்பட்ட தனுஷின் பெற்றோர்கள்.. ஐஸ்வர்யா விவாகரத்திற்கு இதுதான் காரணமாம்..!
அதனை தொடர்ந்து, துபாயை சேர்ந்த தொழிலதிபருடன் திருமணம் என்றும், பாஜக நிர்வாகியின் மகனுக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் திருமணம் என்றும், பல செய்திகள் தொடர்ந்து கொண்டே வந்த நிலையில், தற்போது அந்த லிஸ்டில், வேறொரு நகைக்கடை உரிமையாளரின் மகன் பெயர் அடிபட்டுள்ளது. இப்படி மகள் கீர்த்தி சுரேஷின் திருமணம் சம்பந்தமான பல செய்திகள் வெளியான நிலையில், அவருடைய குடும்பத்தார் மிகவும் கவலை அடைந்துள்ளதாகவும், தங்களுடைய மகளுக்கு திருமணம் நடந்தால் நாங்களே அதை அறிவிப்போம் என்று விளக்கமும் கொடுத்து வருகின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் போதுண்டா லிஸ்ட் பெருசா போய்க்கிட்டே இருக்கு.. இதுக்கு இல்லையா ஒரு எண்டு என்பது போல கமெண்ட் செய்து வருகின்றனர்.