கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து அதிரடியாக அறிவித்த அவரின் தாயார்..!
Author: Udayachandran RadhaKrishnan29 January 2023, 11:00 am
2015ம் ஆண்டு விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் மூலம் செம பிரபலம் அடைந்தார். அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.
இப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியவர் கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு ரஜினி, விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.
தற்போது கீர்த்தி சுரேஷ், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்துதெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தன்னுடன் பள்ளியில் படித்த நபரை 13 ஆண்டுகளாக காதலித்து வருகிறார் என்றும், விரைவில் திருமணம் செய்யக்கொள்ளப்போகிறார்கள் என்றும் செய்தி இணையத்தில் உலா வந்தது.
இந்நிலையில், இது குறித்து பேசிய கீர்த்தி சுரேஷின் அம்மா, ” கீர்த்தி சுரேஷின் திருமண செய்தி முற்றிலும் பொய்யான தகவல். பரபரப்புக்காக சிலர் இது போன்ற செய்திகளை கிளப்பிவிட்டுள்ளார்கள்” என்று அதிரடியாக கூறி கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.