குடிகாரன் என் மேல சாய்ஞ்சி…. மோசமான அனுபவத்தை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!

Author: Shree
22 November 2023, 4:12 pm

கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

keerthy suresh - updatenews360

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இதனிடையே தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மிட் தோற்றத்திற்கு மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, தமிழ் என படு பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தான் அனுபவித்த மோசமான சம்பவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ள கீர்த்தி சுரேஷ், நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நானும் என் தோழியும் நடந்துச்செல்லும்போதே ஒரு குடிகாரன் வந்து என் மீது சாய்ந்தான்.

keerthy suresh - updatenews360

நான் கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே அவனை பளார் விட்டேன். பதிலுக்கு அவன் பின்னால் இருந்து என் தலையில் அடித்தான். எனக்கு ஏதோ வண்டி மோதியது போல் மயக்கமாக இருந்தது. ஆனாலும் அவனை விடமால் துரத்தி சென்று போலீசில் பிடித்துக்கொடுத்தேன் என மோசமான அனுபவத்தை பற்றி கூறினார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 316

    0

    0