தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்ட வருபவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக டாப் அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.
தமிழ் ,மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் 2000 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை தொடங்கி அதன் பிறகு ஹீரோயினாக அவதாரம் எடுத்தார் .
இவர் முதன் முதலில் 2013 ஆம் ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாள திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து விஜய், தனுஷ் ,சிவகார்த்திகேயன், விக்ரம், விஷால், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை அட்லீ தெறி படத்தின் ரீமேக்காக இயக்கி வருவது குறிப்பிட்டு தக்கது. இந்த நிலையில் சமீபத்திய விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியான உடையில் தென்பட்டார். அந்த உடையில் அவர் பார்ப்பதற்கு கடல் கன்னி போல் இருப்பதாக நெட்டிசன்ஸ் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதில் சிலர் கீர்த்தி சுரேஷா இப்படி? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ: