அப்போ விஜய் – கீர்த்தி சுரேஷ் கிசுகிசு உண்மையா..? இணையத்தில் வெளியான போட்டோவால் சர்ச்சை !
Author: Rajesh2 April 2023, 3:30 pm
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். 90ஸ் பிற்பாதியில் தொடங்கி தற்போது வரை எட்டி பிடிக்க முடியாத உச்சத்தில் கொடிகட்டி பறந்து வருகிறார். பிரபல இயக்குனர் S A சந்திரசேகர் அவர்களின் மகனும் ஆவார். தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள இவரது திரைப்படங்கள் வெளியானாலே சமூக வலைத்தளங்கள் எங்கும் இவரது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து விடுவார்கள்.

பொங்கல் பண்டிகையையொட்டி இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியானது. குடும்பக் கதையை கொண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. என்னதான், திரையுலகை பொறுத்தவரை விஜயை கொண்டாடி வந்தாலும், விஜய் அவர்களின் சொந்த வாழ்க்கை குறித்து நெகட்டிவ் விமர்சனங்களும் கருத்துக்களும் ஏராளமாக சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.

சமீப காலமாக, விஜய்க்கும் அவரது பெற்றோருக்கும் உள்ள கருத்து வேறுபாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், விஜய்க்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆகவிருப்பதாக தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. காரணம், நடிகர் விஜய் திரைப்பட விழா, ஆடியோ வெளியீட்டு விழா, பிரபலங்களின் திருமணம் எது என்றாலும் தனது மனைவியை அழைத்து வருவார்.
ஆனால் அட்லீ-பிரியா சீமந்த நிகழ்ச்சிக்கும், வாரிசு ஆடியோ வெளியீட்டிலும் தனது மனைவியை அழைத்து வரவில்லை. இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிய இருக்கிறார்களோ என பேச்சு அடிபட்டது. மேலும், பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷுடன் விஜய் நெருக்கமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் கையில் V என்ற எழுத்து இருக்கும் படி புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் சிலர், V என்றால் விஜய்யா என்று கேட்டு வருகின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடித்து வெளியான தசரா படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் வெண்ணிலா அதற்காக V என்ற எழுத்தை பிடித்தது போஸ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.