அதுப்புல கொஞ்சம் ஓவரா ஆடிட்டேன் அதுக்காக இப்படியா? பிரபல நடிகைக்கு சைலண்டா சம்பவம் செய்த கீர்த்தி சுரேஷ்!

Author: Shree
22 July 2023, 8:28 pm

கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழியில் முன்னணி நடிகையாக தற்போது கீர்த்தி சுரேஷ் ஜொலித்து வருகிறார். இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறார். அடுத்தடுத்து கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. மாமன்னன் படத்தை தொடர்ந்து கண்ணிவெடி என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அந்த படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் இந்தியில் ரீமேக் செய்யவுள்ள தெறி படத்தில் கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியுள்ளாராம். ஆனால், இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு முதலில் ராஷ்மிகா மந்தனாவுக்கு தான் கிடைத்ததாம். ஆனால், அவர் நேஷ்னல் க்ரஷ் என திடீரென புகழின் உச்சத்தை தொட்டதால் கொஞ்சம் மிதப்பில் ஆடி தென்னிந்திய சினிமா பற்றியும், தென்னிந்திய நடிகர்களை பற்றியும் குறை கூறியதால் அவருக்கு கிடைக்கவிருந்த வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது. தற்போது ராஷ்மிகாவின் கைவசம் ஒரே ஒரு இந்தி பட மட்டும் தான் இருக்கிறதாம். இதனால் கீர்த்தி சுரேஷ் அமைதியாக, அடக்கமாக இருந்து இந்தி, தமிழ், தெலுங்கு என ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 589

    10

    2