அப்பாவுக்கு நம்பிக்கையே இல்ல…. என் மீது நிறைய சந்தேகம் – கீர்த்தி சுரேஷ் வருத்தம்!

Author: Rajesh
10 February 2024, 5:45 pm

அழகு நடிகையாக, ஹோம்லி பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் இது என்ன மாயம் திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியான நடித்து பிரபலமானார். தொடர்ந்து ரஜினி முருகன் , தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். மகாநடி படத்தின் இவரின் நடிப்பு எல்லோரையும் பிரம்மிக்க வைத்தது.அப்டத்திற்காக தேசிய விருது வாங்கி தென்னிந்திய சினிமாவிற்கே பெருமை சேர்த்தார்.

தொடர்ந்து சில தோல்விகளை சந்தித்த கீர்த்தி சுரேஷ் தெலுங்கிலும் பிளாப் திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் இழந்தார். இதனிடையே விஜய் , அனிருத், குடும்ப நண்பர் என அவ்வப்போது யாருடனாவது காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இதனிடையே பாலிவுட் வாய்ப்பிற்காக தனது உடல் எடையை குறைத்து படு ஒல்லியாகிவிட்டார். அந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷ் ரொம்பவே விமர்சிக்கப்பட்டார்.

ஆனாலும் அவர் அதை பெரிது படுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில் தனது அப்பா குறித்து நிறைய விஷயங்களை கூறியுள்ளார். அதாவது, என் அக்கா அமெரிக்காவுக்கு சென்று படித்தார். என்னையும் அவளைப்போலவே அங்கு அனுப்பி படிக்கவைக்க வேண்டும் என அவர் ஆசைப்பட்டார்.

ஆனால், சினிமாவில் நடிக்கவேண்டும் என்பதில் தான் எனக்கு ஆசை. நான் அங்கு சென்றுவிட்டாள் என் கனவு வீணாகிவிடும் என்பதால் அவருக்கு டிமிக்கி கொடுத்துக்கொண்டே எஸ்கேப் ஆகிவிட்டேன். என் அப்பாவுக்கு நான் சினிமாவில் ஒரு நல்ல இடத்திற்கு வருவேன் என்பதில் நம்பிக்கையே இல்லை. அப்படி நான் நடித்து வெளியான படம் ஓடவே இல்லை என்றால் அடுத்து நான் எந்த வேளைக்கு செல்வேன் என்பதை நினைத்து அவர் சினிமா வேண்டாம் என்றார். அந்த சமயங்களில் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த என்னுடைய அக்கா தான் எனக்கு சப்போர்ட்டாக இருந்து இந்த துறையில் நான் முன்னேற பெரிதும் உதவினார் என கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

  • taapsee pannu said to vetrimaaran that one national award is pending for her என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…