அஜித் உடன் நடிக்க மாட்டேன்… கீர்த்தி சுரேஷுக்கு ஆசை கொஞ்சம் அதிகம் தான்!

Author:
19 August 2024, 3:44 pm

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு விக்ரம் பிரபு இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் இப்படி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் தற்போது ரகு தாத்தா திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. பெண்களின் சுதந்திரம் பற்றிய கருத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்.

அதை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியான. தெறி படத்தின் இந்தி ரீமேக்காக எடுக்கப்பட்டிருக்கும் “பேபி ஜான்” திரைப்படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகை சமந்தா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் குறித்து பேசி இருக்கிறார். அப்போது எனக்கு அஜித் சார் என்றால் மிகவும் பிடிக்கும். நான் அஜித்துடன் ஜோடியாக சேர்ந்து நடிக்கத்தான் ஆசைப்படுகிறேன்.

ஒருபோதும் அவருடன் தங்கையாக நடிக்கவே மாட்டேன் என கூறினார் கீர்த்தி சுரேஷ். மேலும், அஜித்தை சந்தித்த அனுபவம் உங்களுக்கு உண்டா? என கேள்வி கேட்டதற்கு… ஆம் நான் அண்ணாத்த படத்தின் சூட்டிங் இப்போது தங்கியிருந்த ஹோட்டலில் தான் அஜித் சாரும் தங்கி இருந்தார். அப்போது அங்கு சென்று அவரை சந்தித்து பேசினேன் என கூறினார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!