கீர்த்தி சுரேஷுக்கு அடித்த ஜாக்பாட்…வாரி கொடுத்த அட்லீ…முதல் பாலிவுட்டில் இத்தனை கோடி சம்பளமா..!
Author: Selvan19 December 2024, 1:06 pm
கீர்த்தி சுரேஷின் பாலிவுட் அறிமுகம்
நடிகை கீர்த்தி சுரேஷ் முதன் முதலாக பேபி ஜான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆகியுள்ளார்.இப்படத்தை பிரபல இயக்குனர் அட்லீ தயாரித்துள்ளார்.
ஏற்கனவே தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் ஆக இப்படத்தை எடுத்துள்ளனர்.இப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக வருண் தவான் நடித்துள்ளார்.
சமீபத்தில் படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இதுவரை இல்லாத அளவிற்கு பாடலில் கவர்ச்சியாக நடித்திருப்பார் கீர்த்திசுரேஷ்.தற்போது படத்தின் முழு பணிகள் முடிவு பெற்று வருகின்ற டிசம்பர் 25 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இதனால் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு மும்மரமாக இறங்கியுள்ளது.சமீபத்தில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடைபெற்றதால் அவர் படத்தினுடைய பெரும்பாலான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியவில்லை.
இதையும் படியுங்க: சோபிதாவுக்கு நாகசைதன்யா போட்ட கட்டளை… பற்றி எரியும் பிரச்சனை!!
இந்நிலையில்,மும்பையில் நடந்த ப்ரோமோஷன் விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் முடிந்த கையோடு கலந்து கொண்டிருக்கிறார்.அதில் கழுத்தில் தாலியுடன், சிவப்பு நிற கவர்ச்சி உடையில் வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.அவருக்கு பேபி ஜான் பட டீம் உற்சாக வரவேற்பை அளித்தது.
Team #BabyJohn pic.twitter.com/xH6Vyv8pHG
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 18, 2024
மேலும்,இந்தப் படத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷ் 4 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நெட்டிசன்கள் “கீர்த்தி தனது சம்பளத்தோடு கவர்ச்சியையும் சேர்த்து அதிகரித்துள்ளார்” என கமெண்ட் செய்து வருகின்றனர்.