சினிமாவில் குறுகிய காலத்தில் வளர்ச்சி கிடைப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல. அப்படி கிடைத்தால் அந்த நடிகர், நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் குறுகிய காலத்தில் உச்சத்துக்கு சென்ற நடிகைகள் சில நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என கட்டுப்பாடுகளை விதிப்பது இயக்குநர்கள், பட தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை தரும் விஷயம் என்றே கூறலாம்.
அப்படித்தான் முதல் படமே ஊத்திக்கிட்டாலும், வாரிசு நடிகை என்ற பெயர் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறிப்பாக இவரது அழகும், வசீகரமும் தான் இவர் முன்னேற்றத்திற்கு காரணம்.
ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன், விக்ரம்பிரபு என இளம் நாயகர்கள் உடன் நடித்தாலும், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலங்கு என அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடன் குறுகிய காலத்தில் நடித்து பிரபலமானார்.
மேலும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து தேசிய விருது தட்டிச்சென்றது மற்ற நடிகைகளிடம் சற்று பீதியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது ஒரு சில படங்களில் மட்டும் கமிட் ஆகியுள்ள நிலையில், தமிழில் முன்னணி நடிகரான ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள சைரன் திரைப்படம் வெளியாகியுள்ளது, நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில், ஒரு சில மாதங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர் சதீஷ் உடன் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக இணையதளத்தில் வதந்தி ஒன்று பரவியது. பைரவா படத்தின் பூஜையின் போது இருவரும் கழுத்தில் மாலையுடன் நின்று கொண்டிருந்த புகைப்படத்தை வைரலாக்கி இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர் என்று கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா நடிகர் சதீஷ்-ஐ போன் காலில் தொடர்பு கொண்டு பேசியபோது, கீர்த்தியின் தாய் சதீஷை அவர் மாப்பிள்ளை என அழைத்தாராம். ஒரு வினாடி சதீஷ் ஷாக் ஆகி விட்டாராம். கிண்டல் செய்யத்தான் அவர் இப்படி பேசினார் என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சதீஷ் தெரிவித்துள்ளார்.
அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ரெட்ரோ. இந்த படம்…
கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச்…
சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
This website uses cookies.