கட்சி அறிவிப்பு ‘அந்த’விஷயத்துக்காக வருத்தப்பட்ட விஜய்.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..!

Author: Vignesh
2 August 2024, 3:00 pm

விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. அவர் எந்த படத்தில் நடித்தாலும் வெற்றி தான் என்றானது. படத்தை தவிர பொதுநிகழ்ச்சிகளில் அவரின் எளிமையான குணம் கண்ட மக்கள் அவரை விரும்புகின்றனர். தற்போது, அரசியல் இறங்கி இருக்கும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

விஜயின் படம் வெளியாகிறது என்றால், தமிழ்நாடு திருவிழா கோலமாக இருக்கும். இப்போது அவரது நடிப்பில் அடுத்தது கோட் படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா படம் அடுத்தது வெளியாக இருக்கிறது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி படம் வெளியாகியுள்ள நிலையில், பட குழுவினர் பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். அப்படி ஒரு பேட்டியில், விஜயின் அரசியல் வருகை குறித்து நடிகை கீர்த்தி சுரேஷிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் ரிவால்வர் ரீட்டா படம் நடித்துக் கொண்டிருந்தபோது அங்கு பக்கத்திலேயே விஜய் அவர்களின் படப்பிடிப்பு நடந்து வந்தது. அந்த நேரத்தில், அப்போது தான் அவரது அரசியல் வருகை தகவல் வந்தது. உடனே அவரை சந்தித்து நானும் உங்களது கட்சியில் ஒரு மெம்பர்ஷிப் எடுக்கிறேன். எனக்கு சந்தோஷம். எப்படி இருந்தது என கேட்டபோது, கடைசி படம் என்று எழுதும் போது கஷ்டமாக இருந்தது. ஆனால், சந்தோஷம் என்று விஜய் கூறியதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 184

    0

    0