விஜய்யுடன் இணைந்து அரசியல்? வார்த்தைவிட்டு மாட்டிக்கொண்ட கீர்த்தி சுரேஷ்!

Author:
12 August 2024, 1:23 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழை தாண்டி தெலுங்கு ஹிந்தி மலையாளம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது கேஜிஎப் காந்தாரா உள்ளிட்ட மாபெரும் வரலாற்று வெற்றி திரைப்படங்களை தயாரித்த ஹேம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் முதன்முறையாக தயாரிக்கும் தமிழ் திரைப்படமான ரகு தாத்தா திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் தான். இப்படம் பெரும் வரவேற்பை பெற்ற தி ஃபேமிலி மேன் வெப் தொடருக்கு கதை எழுத சுமன் குமார் தான் எழுதி இருக்கிறார். இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் உடன் எம் எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி , ரவீந்திர விஜய், ஆனந்த் சுவாமி, ராஜேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போல நடித்திருக்கிறார்கள்.

மேலும் இப்படத்திற்கு ஒய் யாமினி ஒழிப்பதிவு செய்ய ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் தற்போது இவ் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கீர்த்தி சுரேஷ் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் பெண் சுதந்திரம் பற்றிய தனது கருத்தினை மிகவும் ஜாலியாக பகிர்ந்து கொண்டார்.

keerthy suresh - updatenews360

கலாச்சாரம் என்ற பெயரில் பெண்கள் மீது பல கட்டுப்பாடுகளை திணிக்கிறார்கள். ஆனால் நாங்கள் இந்த படத்தில் அப்படி எதுவுமே சீரியஸாக காட்டி இருக்க மாட்டோம். எல்லாமே காமெடியான காட்சி தான் படம் முழுக்க வந்து போகும். மேலும் அரசியல் ஆசை குறித்து கேட்டதற்கு. நான் இப்போதைக்கு அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை.

இப்போதைக்கு நடிப்பு மட்டும் தான் எதிர்காலத்தில் எதிர்காலத்தில் அரசியல் ஆசை வரலாம் வராமலும் போகலாம் என பதில் அளித்தார். கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே விஜய்யுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் அரசியல் ஆசை வரலாம் என்பது குறித்து அவர் பேசி இருப்பதற்கு விஜய்யுடன் சேர்ந்து அரசியலில் பயணிப்பாரோ என ஒரு கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!