மஞ்சள் கயிறுக்கு பின்னாடி இப்படி ஒரு ரகசியமா…நச்சுனு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ்..!
Author: Selvan4 January 2025, 3:50 pm
பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!A
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
இவர் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனி தட்டிலை 15 வருடம் காதலித்து பின்பு திருமணம் செய்துள்ளார்,இந்த நிலையில் படம் சம்மந்தமான நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல சேனல்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்தார்.
அப்போது பலரும் அவரிடம் நீங்கள் ஏன் இன்னும் மஞ்சள் கயிற்றை மாற்றவில்லை என கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இதையும் படியுங்க: பொறுத்தது போதும் பொங்கி எழுந்த ரிஷப் பந்த்…சூடுபிடித்த ஆடுகளம்..!
அதற்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளார்,அதாவது திருமணம் ஆகி எனக்கு இப்போது மூன்று வாரம் தான் ஆகிறது,மஞ்சள் கயிற்றை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் மாற்ற கூடாது,அதனால் நான் தொடர்ந்து அணிந்துள்ளேன்,ஜனவரி இறுதியில் நல்ல நாள் பார்த்து கயிற்றை மாற்றுவேன் என கூறியுள்ளார்.
மேலும் இந்த மஞ்சள் கயிறு தாலி அணிவது நான் ரொம்ப புனிதமாகவும்,சக்தி வாய்ந்ததாகவும் பார்க்கிறேன் என அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.
இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த பேபி ஜான் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறாமல் தோல்வியை தழுவி வருகிறது.இதனால் தன்னுடைய முதல் பாலிவுட் படமே கீர்த்தி சுரேஷுக்கு கைகொடுக்கவில்லை.