விரைவில் திருமணம்?.. அனிருத் குறித்து மவுனம் கலைத்த கீர்த்தி சுரேஷ்..!
Author: Vignesh18 September 2023, 6:30 pm
கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.
இதனிடையே தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மிட் தோற்றத்திற்கு மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, தமிழ் என படு பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். அந்தவகையில் இவர் இசையமைப்பாளர் அனிருத்தை ரகசியமாக காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்கள் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், இது வெறும் வதந்தி என கீர்த்தி சுரேஷின் அப்பா கூறியுள்ளார். அனிருத் கீர்த்தி சுரேஷ் இருவரும் ரெமோ, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் சேர்ந்து பணியாற்றியதால் அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பை இப்படி தவறாக புரிந்துக்கொண்டதாக விளக்கம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்து கீர்த்தி சுரேஷ் கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது, வட இந்திய ஊடகங்கள் தன்னைப் பற்றியும் அனிருத் குறித்தும் தவறான செய்திகளை பரப்புவதாகவும், தனக்கு அவர் நல்ல நண்பர் என்றும் கூறியுள்ளார். திருமணம் நடக்கும் என்று பதிலையும் நடிகை கீர்த்தி சுரேஷ் கூறி இருக்கிறார்.