STR 48: தீபிகா படுகோன் இல்லையாம்.. சிம்புவுக்கு ஜோடியாகும் நடிகை இவரா?.. லேட்டஸ்ட் Update..!

Author: Vignesh
19 May 2023, 6:30 pm

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகராக இருந்து தொடர்ந்து ஹிட் திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் பிடித்தவர் நடிகர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தனது தந்தை டி.ராஜேந்தர் நான்கு வயதில் “என் தங்கை கல்யாணி” படம் மூலம் சிம்புவை கைக்குழந்தையாக அறிமுகம் செய்துவைத்தார்.

குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்து சிறுவயதிலே சிம்பு புகழ் பெற்றார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் பதினெட்டு வயதில் “காதல் அழிவதில்லை” படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். தம், குத்து, கோவில், மன்மதன், வல்லவன் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் பத்து தல இப்படம் பெரிதாக ஓடவில்லை. வெற்றிமாறனின் விடுதலை இப்படத்தை தூக்கி சாப்பிட்டுவிட்டது.

அதையடுத்து தற்போது கமல் ஹாசனின் தயாரிப்பில் தனது 48வது படத்தில் சிம்பு நடிக்க உள்ளார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நட்சத்திர நடிகை தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்தநிலையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தான் சிம்பு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என உறுதிபடுத்தாத தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக, தீபிகா படுகோனை இரண்டாம் ஹீரோயின் கதாபாத்திரத்திற்காக தான் அணுகி இருந்ததாகவும், ஆனால், அந்த ரோலுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் எனவும் சொல்லப்பட்டது. மேலும், தீபிகா அதிக சம்பளம் கேட்பதால் அவருக்கு பதிலாக வேறு நடிகையையும் படக்குழு ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு இருக்கிறது.

simbu -updatenews360-1

சிம்பு தற்போது லண்டலின் STR 48 படத்திற்காக பயிற்சி பெற்று வருகிறார். அந்த ஒரு மாத பயிற்சி முடிந்து சிம்பு திரும்பிய பிறகு வரும் ஆகஸ்ட் மாதத்தில் தான் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 491

    1

    0