‘காட்டு கவர்ச்சி’ காட்டிய கீர்த்தி சுரேஷ்.. பாலிவுட்டுக்கு போனா மட்டும் தாராளமா?

Author: Udayachandran RadhaKrishnan
25 November 2024, 4:23 pm

தமிழில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பெரும் வெற்றி படமான தெறி திரைப்படம், தற்போது இந்தியில் உருவாகி வருகிறது. இந்த ரீமேக் படத்தை அட்லீ தயாரிக்க, கலீஸ் இயக்குகிறார்.

இதையும் படியுங்க: சீனாவில் மகாராஜா…. ரூ.700 கோடி சாத்தியமா? கொண்டாடும் ரசிகர்கள்!

இப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பாடலின் டீசர் மற்றும் விவாதம்:

இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான நெய்ன் மடாக்கா பாடலின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் கீர்த்தி சுரேஷின் கவர்ச்சியான உடைகள் மற்றும் நடன அசைவுகள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன.

தற்போது இந்த பாடலின் முழு வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பரவலாக பகிர்ந்து வருகிறார்கள். அதேசமயம், சிலர் கீர்த்தி சுரேஷின் க்ளாமர் தோற்றத்தை குறித்து விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

Keerthi Turned as Glamour in Baby Jhon Movie

தமிழ் படங்களில் கீர்த்தி பொதுவாக க்ளாமர் காட்சிகளை தவிர்ப்பார். ஆனால் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் அதை தாராளமாக ஏற்றுக்கொள்வதாகவும் சிலர் விமர்சிக்கின்றனர். இது ரசிகர்களிடையே கலகலப்பான விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ