என்னடா இப்படி பண்ணி வெச்சிருக்கீங்க… ஜெயிலர் பட மீம்களில் விஜய், கீர்த்தி : வைரல் வீடியோ!
Author: Vignesh4 September 2023, 4:45 pm
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர். இதனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்த்ததை போலவே உலகம் முழுவதும் வெளியான ஜெயிலர் படத்திற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துது. இதுவரை இப்படம் சுமார் 600 கோடிக்கும் அதிமான வசூல் ஈட்டி சாதனை படைத்தது.
இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் விவகாரம் குறித்து பல செய்திகள் அவ்வப்போது கிசுகிசுகளாக வெளிவந்து கொண்டிருந்தன. இரு படங்களில் ஜோடியாக நடித்தவுடன் இவர்கள் நெருக்கமாக இருக்கிறார்கள் என்பது போல் பல்வேறு விதமாக, கோலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது. தற்போது ஜெய்லர் படத்தில் ஒரு காட்சியை வைத்து விஜய் கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜயின் மேனேஜர் ஜெகதீசனை வைத்து வீடியோவை நெட்டிசன்கள் இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.
this is the main reason why @actorvijay fans hate blast mohan scenes in #Jailer. #VidaaMuyarchipic.twitter.com/qc7xlWWvP2
— M̷ɾ. 𝐃 (@__Dhinu__) September 3, 2023