கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

Author: Hariharasudhan
19 November 2024, 9:43 am

கீர்த்தி சுரேஷ், தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை அடுத்த மாதம் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் நடித்து பின்னர், சிறு வேடங்களில் இளம் வயதிலும் நடிக்கத் தொடங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ், 2016ஆம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘ரஜினிமுருகன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின்னர், தமிழில் நடித்து வந்த அவர், விஜய், விக்ரம், ரஜினிகாந்த் ஆகிய முன்னணி நடிகர்கள் உடன் நடித்தார். இதனிடையே, பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து கவனம் பெற்றது மட்டுமல்லாமல், அப்படத்திற்காக தேசிய விருதையும் கீர்த்தி சுரேஷ் பெற்றார்.

தொடர்ந்து, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் பரவி வந்தது. ஆனால், அது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தான், ஆண்டனி தட்டில் என்ற தனது நீண்ட நாள் காதலரை கரம் பிடிக்க உள்ளார் கீர்த்தி சுரேஷ். கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த ஆண்டனி, தற்போது துபாயில் வசித்து தொழில் செய்து வருகிறார். இவர் உடன் தனது பள்ளிப் பருவத்தில் இருந்தே சுமார் 15 வருடங்களாக காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

KEERTHY SURESH IN HOT

இதனையடுத்து, வருகிற டிசம்பர் 11 அல்லது 12 ஆகிய தேதிகளில் கோவாவில் வைத்து இருவருக்கும் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: தமிழை மதிக்காத புஷ்பா 2 ..சாதனையில் கலக்கும் ட்ரெய்லர்…!

கீர்த்தி சுரேஷ் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியகி மெகா ஹிட் அடித்த ‘தெறி’ படத்தின் ரீமேக்கான ‘பேபி ஜான்’ என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாக உள்ளார். அதேபோல், ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற படம் விரைவில் தமிழில் வெளியாக இருக்கிறது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 361

    0

    0