ஹீரோவா களமிறங்கும் கருணாஸ் மகன்….வெற்றிமாறன் கொடுத்த அதிரடி அப்டேட்…!
Author: Selvan22 January 2025, 3:56 pm
மலையாள படத்தை ரீமேக் செய்ய உள்ள வெற்றிமாறன்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான கருணாஸின் மகன் கென் கருணாஸ் முதல்முறையாக படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறு வயதில் இருந்தே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருபவர் கென் கருணாஸ்.அசுரன் திரைப்படத்தில் தனுசுக்கு மகனாக நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார்.இந்த நிலையில் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை-2 படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்து மிரட்டிருப்பார்.
தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் கென் கருணாஸுக்கு இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்க உள்ள படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்க: தனுஷ் இயக்கிய முதல் படம் பா.பாண்டி இல்லையா…உண்மையை உடைத்து பேசிய கெளதம் வாசுதேவ் மேனன்..!
மலையாளத்தில் ஹிட் ஆன ஆலப்புழா ஜிம்கானா என்ற படத்தை தமிழ் ரீமேக் செய்ய உள்ளார் வெற்றிமாறன்,இப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளார்,தற்போது இப்படத்தின் ரீமேக் உரிமையை பெறுவதற்கான வேலைகளில் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் இறங்கியுள்ளது.
இவர் மேலும் நடிகை ஆண்ட்ரியாவை வைத்து மனுசி என்ற படத்தை உருவாக்கி வருகிறார்.அதுமட்டுமில்லாமல் கவின் நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.