மோசடி புகாரில் சிக்கிய நடிகை..சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை..!
Author: Selvan30 November 2024, 6:55 pm
மோசடி வழக்கில் சிக்கிய பிரபல மலையாள நடிகை
பிரபல மலையாள நடிகையான தன்யா தற்போது மோசடி புகாரில் சிக்கியுள்ளார்.இவர் தமிழில் திருடி,வீரமும் ஈரமும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் மலையாளத்தில் தன்யா மேரி வர்கிஸ் என்ற பெயரில் பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தற்போது தனது கணவர் ஜான் ஜேக்கப்புடன் இணைத்து கட்டுமான நிறுவனம் மற்றும் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இதையும் படியுங்க: தக் லைஃப் படத்தின் முதல் விமர்சனம்..கங்குவா ரேஞ்சுக்கு பில்ட்அப் விடுத்த நடிகர்..!
இவர்கள் பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தருவதாக கூறி பல பேரை ஏமாற்றி பணம் வாங்கியுள்ளனர்.அதுமட்டுமல்லாமல் கூடுதல் வட்டி தருவதாகவும் கூறி கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.

இதனால் நடிகை தன்யாக்கு சொந்தமான திருவனந்தபுரத்தில் உள்ள சுமார் 1.56 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.இது தொடர்பாக கேரளா போலீஸார் தன்யாவின் குடும்பத்தை விசாரித்தும் வருகிறது.