திரையரங்கில் மிரட்டும் கே.ஜி.எப்.. படத்தின் எடிட்டர் யார் தெரியுமா..?

Author: Rajesh
14 April 2022, 5:38 pm

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்கில் கேஜிஎஃப் முதல் பாகம் வெளியானது. கன்னட மொழி திரைப்படமான இப்படம் வெளிவந்த பொழுது யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை, திரையரங்குகளில் ஒரு சாதாரண படமாகவே கடந்து சென்றது.
தொடர்ந்து ஓடிடி மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியான பின்பு தான் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது.

இதனால் கேஜிஎஃப் இரண்டாம் பாகம் எப்பொழுது வெளியாகும் என்று இந்தியா முமுவதுமே ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்த சூழ்நிலையில் தான் இன்று உலகம் முழுவதும் வெற்றிகரமாக திரையரங்கில் வெளியாகி உள்ளது. தொடர்ந்து இப்படம் உலகம் முழுவதும் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகத்தில் முதல் நாளான இன்று 250 திரையரங்கங்களில் மட்டுமே கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளிவந்திருந்தது.

அதிலும், மல்டிபிளேக்சில் மட்டுமே கே.ஜி.எப் திரைப்படம் இரண்டாவது மூன்றுவது திரைகளில் வெளிவந்திருந்தது. இந்த நிலையில் இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த கேஜிஎஃப் படத்தின் எடிட்டருக்கு வெறும் 19 வயதுதான் ஆகிறதாம். இப்படி ஒரு பிரமாண்ட படத்திற்கு எப்படி எடிட் செய்து இருப்பார் என்று சினிமா ரசிகர்கள் ஆச்சிரியப்பட்டு வருகின்றனர்.

  • Allu Arjun controversy போலீசை எதிர்த்த அல்லு அர்ஜுன்…தீவிர நடவடிக்கையில் தெலுங்கானா அரசு..!
  • Views: - 1256

    4

    0