இதை பண்ணா போதும் யாஷ் காலி ஆகிடுவாரு.. – அந்த விஷயத்தை வெளிப்படையாக பேசிய நடிகை..!

Author: Vignesh
22 September 2023, 8:23 pm

கன்னட திரையுலகின் பிரபலமான நட்சத்திரமான யாஷ், கேஜிஎப் படத்தின் மெகா வெற்றியின் மூலம், சமீப காலங்களில் இந்திய சினிமாவின் மிகவும் விரும்பப்படும் திறமையாளர்களில் ஒருவராகவும், முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

2007ஆம் ஆண்டில் இருந்து நடித்து வரும் யாஷ், பெரிய ஹிட் பட்ங்களை கொடுத்ததில்லை. 2018ல் வெளியான கேஜிஎப் படம் தான் இவரின் திறமையை வெளிகொண்டு வந்தது.

இதையடுத்து அதன் இரண்டாம் பாகம் 2022ல் வெளியானது. கேஜிஎப் 3வது பாகம் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாக வில்லை.

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ரீநிதி ஷெட்டி கேஜிஎப் படம் குறித்த சில நினைவுகளை பகிர்ந்து கொண்டார். ஸ்ரீநிதி ஷெட்டியிடம் படப்பிடிப்பு தளத்தில் ரொம்ப சீரியஸா யாரு இருப்பாங்க என்று எழுப்பட்ட கேள்விக்கு, இயக்குனர் கிட்ட இருக்கிற அதே படபடப்பு டென்ஷன் யாஷ்கிட்டயும் இருக்கும், எப்பவும் சீரியஸாவே பேசிட்டு இருப்பாரு, அவர் சீரியஸா பேசிட்டு இருக்கும்போது நாம சட்டுன்னு சிரிச்சிட்டா போதும், உடனே அவர் காலி ஆகிடுவார்.

shruti shetty - updatenews360 2

அதுக்கப்புறம் சாதாரணமா பேசிக்குவோம். பொதுவா ஷூட்டிங் டைம்ல யாஷ்சை சாதாரணமாக பார்க்கிறதே கஷ்டம். ஒன்னு சீரியஸா இருப்பாரு, இல்லன்னா அவரால இயக்குனர் சீரியஸா இருப்பாரு, அந்த மாதிரி டைம்ல எல்லாம் அவரை சிரிக்க வைக்கணும்னா அவருடைய டென்ஷன காலி செய்யறதுக்கு உண்டான ஒரே வழி இதுதான் என்று ஸ்ரீநிதி ஷெட்டி தெரிவித்துள்ளார்.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!