வேற மாறி வெறித்தனம் overloading … சூர்யாவின் கங்குவா படத்தில் KGF வில்லன்!

Author: Shree
24 April 2023, 7:58 pm

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ” கங்குவா ” இரு வேறு காலகட்டங்களில், வரலாற்றுப் பின்னணியில் கொண்ட கதையாக உருவாகி வரும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. பான் இந்தியா படமாக 10 மொழிகளில் உருவாகி வரும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.

பெரும் பொருட்செலவில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் மிரட்டலாக உருவாகி மிகப்பெரும் வெற்றி பெரும் என எதிர்பார்க்க முடிகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் வெயிட்டான அப்டேட் ஒன்று கிடைத்ததுள்ளது. அதாவது, இப்படத்தில் வில்லனாக நடிகர் பி.எஸ்.அவினாஷ் நடிக்கிறாராம். இவர் இந்திய சினிமாவின் வரலாற்று வெற்றிப்படமாக கே. ஜி. எஃப் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்பபடத்தின் ஷூட்டிங் கொடைக்கானல் பகுதியில் மும்முரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!