படப்பிடிப்பில் அத்துமீறிய ஹீரோ..செருப்பை காட்டிய குஷ்பூ.!

Author: Selvan
23 November 2024, 1:19 pm

குஸ்புவின் ஆரம்ப கால சினிமா பயணம்

கோவாவில் 55 வது சர்வதேச திரைப்பட விழா கடத்த 20 ஆம் தேதி தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.இதில் சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்புகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் நடிகைகள் கலந்து கொண்டனர்.

அதில் குஷ்பூவும் பங்கு பெற்று,”சினிமாவில் பெண்கள் சந்திக்கும் சவால்களை பற்றி கேட்ட போது தனக்கு நடந்த ஒரு மோசமான சம்பவத்தை வெளிப்படையாக பேசினார்.

Khushbu hero controversy

தைரியமாக எடுத்த செயல்

அதில் “நான் சினிமாவில் ஆரம்பகாலகட்டத்தில் இருந்த போது,ஒரு படப்பிடிப்பில் ஹீரோ என்னிடம் தவறான அணுகுமுறையுடன் யாருக்கும் தெரியாமல் எனக்கொரு வாய்ப்பு தருவீங்களா?என்று கேட்டார்.உடனே கொஞ்சம் கூட யோசிக்காமல் “நான் என் செருப்பை உயர்த்தி 41 அளவு,இங்கு வைத்து அறையவா…?எல்லார் முன்னாடியும் கூப்பிட்டு போய் அறையவா.?என்று கேட்டேன்”.

இதையும் படியுங்க: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா..கேரளாவில் வெடித்த பூகம்பம்..!

அதன்பிறகு என்னிடம் பேச அவருக்கு தைரியம் வரவில்லை.நான் அப்போது சினிமாவிற்கு புதுசு,அதை பற்றிலாம் கவலைப்படாமல்,என்னுடைய சுயமரியாதையை எனக்கு முக்கியம் என்று நான் யோசித்தேன்.

நீங்களும் உங்களை எப்போதும் மதிக்க வேண்டும்.திரைத்துறை மட்டுமல்ல அனைத்து இடங்களிலும் “பெண்கள் தங்களுடைய மரியாதையை விட்டு கொடுக்காமல்,யாருக்கும் அடிபணியாமல்,எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்”என்று அந்த நிகழ்ச்சியில் கூறியிருப்பார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!