நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம் – இணையத்தில் வைரலாக்கிய ரசிகர்கள்..!

Author: Rajesh
3 May 2022, 12:15 pm

நடிகை குஷ்பு 1990 காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர். படத்தயாரிப்பு, அரசியல் என்று அனைத்துத் துறைகளிலும் தன் முத்திரையை பதித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் ரசிகர்கள் அவருக்கு கோவில் கட்டும் அளவுக்கு சென்றும் உள்ளனர். மேலும் ரஜினி, கமல், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபுவுடன் சின்னத்தம்பி, ரஜினியுடன் அண்ணாமலை போன்ற திரைப்படங்கள் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இவர் சினிமாவில் மார்க்கெட் குறையவே அப்படியே சின்னத்திரை பக்கம் சென்று அங்கும் நிறைய ஹிட் நிகழ்ச்சிகளை கொடுத்தார். இப்படி சினிமாவில் பல சாதனைகளை செய்து வந்தாலும் குஷ்புவிற்கு அரசியலில் பெரிய அளவில் வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதனால் அரசியலில் கடந்த சில வருடங்களாக அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். அடுத்தடுத்து செய்யும் அவரது பணிகள் கூட அரசியல் சம்பந்தப்பட்டு தான் இருக்கிறது.

குஷ்பு எப்போதும் ஆக்டீவாக சமூக வலைதளத்தில் இருக்கும் ஒரு பிரபலம். டுவிட்டரில் சமூக விஷயங்களை பற்றி பேசும் குஷ்பு இன்ஸ்டா பக்கத்தில் தனது குடும்ப புகைப்படங்களை அதிகம் பதிவிட்ட வண்ணம் இருப்பார். தற்போது, அவர் தனது அம்மாவின் புகைப்படத்தை முதன்முறையாக டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இன்று அவரது பிறந்தநாள் என்பதால் ஸ்பெஷல் பதிவு போட்டுள்ளார் குஷ்பு. இந்த புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!