ரொம்ப தப்பு…. என்கிட்ட இருக்குற அந்த கெட்ட பழக்கம்… கிகியை வெளுத்து வாங்கிய மாமியார்!

Author: Shree
13 June 2023, 8:11 pm

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வாரிசு குடும்பத்தில் இருந்து திரைத்துறையில் அறிமுகமான பலர் திறமையில்லாததால் பெரிய படங்களின் வாய்ப்புகள் கிடைத்தும் அடையாளம் தெரியாமல் போயியுள்ளனர். அந்த லிஸ்டில் இடம்பிடித்திருக்கும் வாரிசு நடிகர் தான் சாந்தனு பாக்யராஜ். இவர் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜின் ஒரே மகன் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

1998ஆம் ஆண்டு வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாந்தனு 2008ஆம் ஆண்டு சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தின் கதை முதலில் நன்றாக இருந்ததாம். ஆனால் மகனின் முதல் படம் மாபெரும் ஹிட் அடிக்கவேண்டும் என எண்ணிய பாக்யராஜின் அந்த கதையில் குறுக்கிட்டு சில மாற்றங்களை செய்யவே அது பிளாப் ஆகிவிட்டதாம். இதனால் அவர் தோல்வி பட ஹீரோவாக முத்திரைகுத்தப்பட்டு எழுந்திரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதனிடையே பிரபல தொகுப்பாளனியான கிகி விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கிகி பூர்ணிமா இருவரும் குடும்பத்தில் நடக்கும் பல சுவாரஸ்யமான தகவல்களை பற்றி பேசினார்கள். அப்போது, என் மாமியாருக்கு பிடிக்காத என்கிட்ட இருக்குற ஒரு கெட்ட பழக்கம் ‘ எங்கயாவது வெளியில் சென்றால் அவரிடம் சொல்லாமல் சென்றிடுவேன் ‘ பின்னர் அவர் திரும்பி வரும்போது செம கோபத்தோடு என்னை திட்டுவார். என கூறினார்.

அதற்கு பதில் அளித்த பூர்ணிமா பாக்கிராஜ், ஆமாம் எங்கு சென்றாலும் சொல்லிவிட்டு சென்றால் எல்லாத்துக்கும் நலல்து. யாரேனும் வந்து என்னிடம் உங்கள் மருமகளை அங்கு பார்த்தேன் என சொன்னால் எனக்கு ஷாக்கிங் ஆக இருக்கக்கூடாது. அவர்கள் சொல்வதற்கு முன் எனக்கு நீ அங்கு தான் சென்றிருக்கிறாய் என தெரிந்திருந்தால் நான் நல்லபடியாக உணர்வேன். இதைத்தான் என்னுடைய அப்பாவும் எங்களுக்கு சொல்லுவார் அது அப்படியே என் பிள்ளைகளிடமும் நான் எதிர்பார்க்கிறேன் என கூறினார்.

https://www.youtube.com/shorts/mqnNBM7QjRw
  • TTF Vasan snake video controversy பாம்பு மட்டும் தானா…TTF வாசன் வீட்டில் வனத்துறையினர் அதிரடி சோதனை..!
  • Views: - 697

    0

    0