படு மோசமான மேலாடை.. அம்பானி வீட்டு கல்யாணத்திற்கு வந்த நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!(Video)

Author: Vignesh
13 July 2024, 10:26 am

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் முதல் ஆளாக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் என்ற மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உலகமே அண்ணாந்து பார்க்கும் வகையில் வானளவு உயர்ந்திருக்கும் அம்பானி சுமார் ரூ. 9,43,091 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார். இதன் மூலம் உலகத்தின் 11வது பெரும் பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி – இஷா அம்பானி என்ற இரட்டை குழந்தையும், ஆனந்த் அம்பானி என்ற இளைய மகனும் உள்ளனர்.

இதில் ஆனந்த் அம்பானிக்கு வருகிற ஜூலை 12ம் தேதி திருமணம். இந்தியாவின் பணக்கார பில்லியனர்களில் ஒருவரான வீரன் ஏ. மெர்ச்சந்த் என்ற வைர வியாபாரின் மகள் ராதிகா மெர்ச்சந்த்தை சில ஆண்டுகள் காதலித்து அண்மையில் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர். இந்த Pre Wedding கொண்டாட்டம் குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள அம்பானியின் வீட்டில் நடைபெற்றது. இத்திருமணத்தில், உலக புகழ் பெற்ற தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.

rajini-ambani-1

தற்போது, இந்தியாவின் ஹார்ட் டாப்பிக்காகவே மாறும் அளவிற்கு இவர்களது திருமண கொண்டாட்டங்கள் பேசுபொருளாக உள்ளது. ப்ரீ வெட்டிங், இத்தாலி கொண்டாட்டம் என ஒரு திருமணத்தை ஏதேதோ பெயர் வைத்து கொண்டாடுகிறார்கள். நேற்று ஆனந்த் அம்பானி ராதிகாவின் திருமண படுகோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் உலகில் இருக்கும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இவர்களது திருமணத்தில் கலந்து கொள்ள ஹாலிவுட் பட நடிகை Kim Kardashian மற்றும் அவரது தங்கை இந்தியா வந்துள்ளனர். இதில், நடிகை Kim Kardashian மிகவும் மோசமான மேலாடை அணிந்து வந்துள்ளார்.

அவரது புகைப்படமும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இதனை பார்த்த ரசிகர்கள் பொது இடத்திற்கு, அதுவும் திருமண நிகழ்விற்கு வரும்பொழுது இப்படி ஒரு மோசமான ஆடையில் வருவதா என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!