கோடிகளில் ஏலம் போன ராக் அண்ட் ரோல் மன்னனின் ஷூ; தீவிர ரசிகரா இருப்பாரோ?
Author: Sudha4 July 2024, 2:13 pm
ராக் அன் ரோல் இசையின் முடி சூடா மன்னனாக திகழ்ந்தவர் எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி. இவர் அமெரிக்க இசைக் கலைஞர்,மற்றும் நடிகர். 20ஆம் நூற்றாண்டின் பண்பாட்டுச் சின்னமாக விளங்கிய இவர், “ராக் அண்ட் ரோலின் மன்னன்” எனப் போற்றப்பட்டார்
1954 ஆம் ஆண்டில் எல்விஸ் பிரெஸ்லி இசைத்துறைக்குள் நுழைந்தார். “ரிதம் அண்ட் புளூஸ்” என்னும் இசை வடிவமும், நாட்டுப்புற இசையும் கலந்து உருவான, “ராக் அண்ட் ரோல்” இசையின் தொடக்க வடிவமான “ராக்கபிலிட்டி” இசை நிகழ்ச்சிகளை நடத்திய முதல் கலைஞர் இவர். “கறுப்பர்” “வெள்ளையர்” இசைகளைக் கலந்து புதுமையாகக் கொடுத்தது இவரை உலகப் புகழ்பெற வைத்தது. பிரெஸ்லி பல்வகைத்திறன் கொண்ட குரல் வளம் பெற்றிருந்தார்.
31 திரைப்படங்களில் நடித்தார். 1968 முதல் மேடை இசை நிகழ்ச்சிகளுகளை நடத்த ஆரம்பித்தார். அமெரிக்காவின் லாஸ் வெகாசில் நிறைய இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.இவருடைய காலம் முழுவதும் இவருடைய மேடை நிகழ்ச்சிகளுக்கு வந்த மக்களின் எண்ணிக்கையிலும், தொலைக்காட்சி ரேட்டிங்கிலும், இசைத்தட்டு விற்பனையிலும் சாதனைகள் நிகழ்த்தினார்.
42 ஆவது வயதில் காலமானார்.இவர் இறப்புக்கு பிறகு இவர் பயன்படுத்திய பொருட்கள் பெரும் தொகைக்கு ஏலம் விடப்பட்டு வருகிறது.இவர் பயன்படுத்திய ஊதா நிற காலணி சில நாட்களுக்கு முன் ஏலம் விடப்பட்டது.இந்திய மதிப்பில் 1.25 கோடிக்கு இந்த காலணி ஏலம் போனது.தீவிர ரசிகர் ஒருவர் இதனை ஏலம் எடுத்தார்.
இசைக் கலைஞர்கள் மரணித்தாலும் அவர்களின் இசையால் மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.