அறிமுகமான புதிதில் தொடர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தாலும் நடிகைகளுக்கு வயது 30 தாண்டிவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சறுக்கல் தான். அந்த வயசுக்குள் அவர்கள் பிரபலமாகி , பெயர் வாங்கி, பணம் சம்பாதித்துக்கொள்ளவேண்டும். இப்படிதான் நடிகர்களுக்கான சினிமா வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
அதற்கும் மேல் அதாவது 30 – 35 வயதுக்கு மேலும் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி கிளாமர் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு மவுஸ் தேடிக்கொண்டு பின்னர் கிடைக்கும் ஐட்டம் டான்ஸ், குணசித்திர வேடங்களில் நடிக்கலாம். அப்படித்தான் தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண் ரத்தோட்.
முதல் படமே மாபெரும் ஹிட் அடிக்க தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிரங்கடித்தார்.
இதனிடையே, எப்போதும் சமூகவலைத்தளத்தில் படு மோசமான ஆபாச புகைப்படங்களை பதிவிட்டு வரும் கிரண் ரதோட் சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிடுவதை பார்த்து தயாரிப்பளார்கள் நிறைய பேர் என்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள்.
நான் மட்டும் இல்லை. என்னை போன்றே பல நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகிறார்கள். ஆனால், என்னைமட்டும் மொத்த மீடியாக்களும் டார்கெட் செய்கிறார்கள். ஏன் என்று எனக்கு புரியவில்லை. நான் ஒன்னும் ஆபாச படத்தில் நடிக்கவில்லையே, எனக்கு பிடித்த ஆடைகளை தான் அணிந்து வீடியோக்களை பதிவிடுகிறேன். கவர்ச்சி போட்டோக்களை போட்டாலே படுக்கைக்கு அழைப்பார்களா? சமூகவலைத்தளத்தில் வரும் மோசமான கமெண்ட்ஸ்கள் என்னை மிகவும் காயப்படுத்துகிறது என கிரண் ரதோட் வேதனையுடன் கூறினார்.
மேலும், சுந்தர் சி இயக்கிய படத்தில் நடித்து தான் பெரிய தவறு செய்து விட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். சுந்தர்.சி இயக்கிய “ஆம்பள” படத்தில் நடித்ததை குறித்து பகிர்ந்து கொண்ட கிரண், படத்தில் நடிக்காமல் நீண்ட நாட்கள் இருந்த நிலையில், சுந்தர்சியிடம் பட வாய்ப்பு கேட்ட நிலையில் அந்த படத்தில், என்னை ஒரு செட் பிராப்பர்ட்டி போலத்தான் அவர் படத்தில் வைத்திருந்தார். அதில், நடித்து நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.