ஸ்டைலிஷ் லுக்கில் மகனுக்கே டஃப் கொடுக்கும் விக்ரம்.. Promotion பணிகளில் தங்கலான் படக்குழு..!

Author: Vignesh
29 July 2024, 10:28 am

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷ நடிகரான விக்ரம் பல வித்யாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை மிரள வைப்பார். அப்படிதான் தற்போது ஞானவேல்ராஜா தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படத்தில் மிரட்டலான வேடத்தில் நடித்து வருகிறார். பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் பேசும் பறையர் இனங்களில் ‘தங்கலால பறையன்’ என்று ஒரு இனம் இருந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் இனத்தவர்களின் தலைவன், ஊர்க்காவலன், மக்கள் பாதுகாவலன், எல்லை வீரனாக இருப்பவர்களை தான் தங்கலான் என்று அழைத்துள்ளனர். இதில் விக்ரம் தங்கலானாக நடித்திருக்கிறார். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முன்னதாக, திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களை இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையொட்டி, படத்தின் முக்கிய பிரபலங்கள் விக்ரம், மாளவிகா மோகன், பார்வதி, பா ரஞ்சித் ஜிவி பிரகாஷ் மற்றும் ஞானவேல் ராஜா கேரளாவில் பிரமோஷன் பணிக்காக சென்றிருந்தனர். அப்போது, கேரளாவில் ரசிகர்கள் பட குழுவினர் மிக வரவேற்பு கொடுத்தனர். அதில், மிகவும் ஸ்டைலிஷ் ஆக ஸ்லோவாகவும் கோட் சூட்டில் மிரட்டியுள்ளார். இந்த படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!